×

ரூ.5.20 லட்சத்தில் கட்டப்பட்ட சிப்பம் கட்டும் அறையை கலெக்டர் ஆய்வு

 

ஊட்டி, நவ. 18: பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேல் பாரதி நகர் பகுதியில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அறுவடை பின் செய் நேர்த்தி சிப்பம் கட்டும் அறையினை நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தில் தோட்டத்துறை துறை சார்பில் விவசாயிகள் முன்னேற்றத்திற்காக பல்வேறு வாளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பல்வேறு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகள் தங்களது பொருட்களை உற்பத்தி செய்ய பல்வேறு ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேல் மேல் பாரதி நகர் பகுதியில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.5.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அறுவடை பின் செய் நேர்த்தி சிப்பம் கட்டும் அறை கட்டப்பட்டுள்ளது.

இதனை நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பணிகளை விரைந்து முடிக்கவும், பன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிபிலாமேரி, உதவி இயக்குனர்கள் பாலசங்கர் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

The post ரூ.5.20 லட்சத்தில் கட்டப்பட்ட சிப்பம் கட்டும் அறையை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Mel Bharati Nagar ,Berati ,Panchayat ,
× RELATED குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா...